Translate »

சூரிய சக்தியினால் தன்னிறைவு பெற்ற இலங்கை

சூரிய சக்தியினால் தன்னிறைவு பெற்ற இலங்கை

சூரிய சக்தி யுத்தத்தில் முன்னேற்றமான மாற்றம் “சூரியபல சங்ராமய” 20 வருட ஒப்பந்த காலத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டத்தின் மூலம் நீங்களும் ஒரு மின்சார உற்பத்தியாளராக முடியும். ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிக வருமானம். மின்சார பாவனையாளராகவும் மின் உற்பத்தியாளராகவும். இத்திட்டத்தின் பிரதான நோக்கம் 20% குறைவான வருமானமுடைய குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தல் ஆகும். இதனால் குறைவான வருமானமுடைய 2 லட்சம் குடும்பங்கள் நவீனமுறையின் கீழ் மின்சார உற்பத்தியாளர்களாக உருவாக்கப்படுவர்.

Net Metering

வீட்டுக்கூரையில் இணைக்கும் சூரிய பெனலினால் உற்பத்தி செய்யப்படும் மின் அலகுகள், பாவனை செய்யும் மின் அலகுகளுக்கு குறைவாக இருப்பின் அந்த வேறுபாட்டிற்கு மாத்திரம் மின்சார சபைக்கு பணம் செலுத்துதல், உற்பத்தி செய்யும் அலகுகளின் அளவு அதிகமாக இருப்பின் 10 வருடங்கள் வரை நிலுவை சந்தர்ப்பங்களில் அக்கணக்கில் சமனிலைப்படுத்தி தொடர முடியும். 

Net Accounting

தங்கள் கூரையில் இணைக்கும் சூரிய பெனலினால் உற்பத்தி செய்யும் மின் அலகு அளவை வீட்டு உரிமையாளரினால் பாவிக்கப்படும் மின் அலகு அளவிற்கு கூடியது என்றால் மின்சார சபை வீட்டு உரிமையாளருக்கு மின் அலகு ஒன்றிற்கு முதல் 7 வருடங்கள் ரூ. 22.00/= ம் 8வது வருடம் முதல் ரூ 15.50/= ம் கொடுப்பனவாக‌ வழங்கும். வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார அளவு குறைவாக இருப்பின் வீட்டு உரிமையாளர் மின்சாரசபைக்கு கட்டணம் செலுத்துவர்.

Net Plus

தங்கள் கூரையில் இணைக்கப்பட்ட சூரிய மின்சார உற்பத்தியினால் மின்சாரம் உற்பத்தி செய்யும் அலகு அளவிற்கு மின்சார சபையினால் வீட்டு உரிமையாளருக்கு கொடுப்பனவு வழங்கப்படும்.

வீட்டிற்கான மின்சார கட்டணத்தை வீட்டு உரிமையாளர் சபைக்கு செலுத்துவர்.

Translate »